மகன் கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை... பழைய பகைக்கு பழி தீர்க்க நடந்த பயங்கரம்....!

x

கொல்லப்பட்டவர் இதே பகுதியை சேர்ந்த சீனா என்கிற சீனுவாசன்.40 வயதாகும் இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று ஏரியாவுக்குள் நடந்த 16 ஆம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, 10 வது படிக்கும் தனது இளைய மகனுடன் சென்றிருக்கிறார் சீனுவாசன். துக்கம் அனுசரிக்க போன இடத்தில் திடீரென ஆட்டோ மற்றும் பைக்கில் வந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று, சீனாவை சரமாரியாக வெட்டி வீசி இருக்கிறது. இதனை தடுக்க வந்த சீனாவின் இளைய மகனுக்கும் வெட்டு விழுந்திருக்கிறது.

அந்த தாக்குதலில் சீனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போக, அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளிகள் யார்...? கொலைக்கான காரணம் என்ன...? என்று விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் சீனாவின் பழைய பகைகள் ஒவ்வொன்றாக வெளிவந்திருக்கின்றன. ஆம்.....சீனா ஒரு பட்டாகத்தி ரவுடி....ஏரியாவில் பல அசால்ட்டுகளை அசால்டாக முடித்தவர்.சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரின் மீது கொலை கொள்ளை, ஆட்கடத்தல் என பல குற்றவழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

அதில் சொல்லப்படும் இரண்டு சம்பவங்களுக்கு தான் இந்த படுகொலை நடந்திருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஒரு ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று திரும்பி இருக்கிறார் சீனா. அதற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த இரு கொலைக்கும் பழிவாங்கும் நோக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த பல்லு விக்கி என்ற ரவுடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சீனிவாசனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.குற்றவாளிகளின் கைதுக்கு பிறகே முழு உண்மையும் வெளிவரும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி பிடித்து கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்