மசாஜ் சென்டர் செல்லும் முதியவர்களை குறிவைத்து வழிப்பறி - சென்னையில் அதிர்ச்சி | chennai | thanthi tv

x

மசாஜ் சென்டர் செல்லும் முதியவர்களை குறிவைத்து வழிப்பறி - சென்னையில் அதிர்ச்சி | chennai | thanthi tv

சென்னையில், மசாஜ் சென்டருக்கு சென்று வரும் முதியவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அடையாறு பகுதியைச் சேர்ந்த முதியவர் நாகராஜ், அங்குள்ள மசாஜ் சென்டருக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர், தாங்கள் போலீசார் என்றும், மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வீட்டில் சொல்லாமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர், அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அடையாறு காவல்நிலையத்தில், நாகராஜ் புகார் அளித்தார். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை செய்தபோது, மெரினாவில் பலூன் வியாபாரம் செய்யும் ஹசன் அலியும், பஜ்ஜி வியாபாரம் செய்யும் ராஜீவ் காந்தியும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் மசாஜ் சென்டர் செல்லும் முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்