அரசு டாக்டர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் சிக்கினார்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
பழனி, அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார். பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரான இவரது வீட்டில், கடந்த 14 ஆம் தேதி 100 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து தங்கத்தை உருக்கும் இயந்திரம் உட்பட 32 சவரன் தங்க கட்டிகள், 5 கிலோ வெள்ளி, 7 லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேடப்பட்டு வந்த கும்பலின் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story