ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை சம்பவம்... மேலும் 43 சவரன் நகைகளை மீட்ட போலீசார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடு போன சம்பவத்தில் அவரின் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பணிப்பெண்ணும், கார் ஓட்டுநர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த சூழலில் அவர்கள் வசமிருந்த மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவர்களிடமிருந்து மொத்த நகைகளையும் மீட்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Next Story