சாலையோரம் மருத்துவ கழிவுகள் - தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் | thiruvarur

x

திருவாரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம், மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் அருகே கோணிப்பைகளில் மருத்துவ கழிவுகள் எடுத்துவரப்பட்டு, தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டு வந்தது. அந்த கழிவுகளுக்கு இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து வந்ததால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, விசாரணையில், அந்த மருத்துவ கழிவுகள், திருவாரூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்து கொட்டப்பட்டது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, தண்டலை ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்