கனமழையில் சிக்கி சின்னாபின்னமாகும் நியூயார்க்... சாலைகள் துண்டிப்பு, ஆயிரம் விமானங்கள் ரத்து..
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் அதன் அண்டை மாகாணங்களில் கொட்டி வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நியூயார்க், பாஸ்டன், மேற்கு மைனே, வெர்மான்டில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர். மழை வெள்ளத்தால்,ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தொடர்மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நியூார்க்கில் இயக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும் நிறுத்தப்பட்டன.
Next Story