"இந்தியாவின் அமைதி, வளர்ச்சியை சீர் குலைக்க முயற்சி" - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

x

புதிய இந்தியாவின் எழுச்சியை சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்கள், விரும்பவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய குடியரசு தின உரையில், அந்த குழுக்கள் இந்தியாவின் அமைதி மற்றும் வளர்ச்சியை சீர் குலைக்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

பிஎஃப்ஐ எனும் பயங்கரவாத அமைப்பு, இந்திய அரசியலமைப்பின் ஸ்திரத்தன்மையை குலைக்க வெளிநாடுகளிடம் இருந்து நிதியை பெற்று ஒற்றுமையை குலைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய குழுக்கள் தமிழ்நாட்டில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

கோவையில், நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம், சர்வதேச பயங்கரவாத கும்பலுடன், இந்த அமைப்பு தொடர்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்