தொழில்போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம்...முன்னாள் பணியாளர் வெறிச்செயல்...
பெங்களூர்
இரட்டை கொலையால் அதிர்ந்த பெங்களூர்...
கொலைகாரனான இன்ஸ்டா பிரபலம்...
தொழில்போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம்...
முன்னாள் பணியாளர் வெறிச்செயல்...
MD, CEO அடுத்தடுத்து கொடூர கொலை...
ஆபீஸில் வெட்டி கொன்ற மாஜி ஊழியர்...
ஆபீஸ் உள்ளேயே எம்டியும், சி இ ஓவும் முன்னாள் ஊழியரால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்காங்க. இன்ஸ்டா பிரபலம் கொலைகாரனானது ஏன்?
ப்ரீத்....எமதர்மன் கெட்டப் ரீல்...
ஒரு கையில் கதாயுதம் மறு கையில் பாசக்கயிறு என மாடர்ன் எமதர்மனாக ஆங்கார நடை போட்டு வரும் இவர்தான் உண்மையிலேயே எமனாக மாறி இரண்டு உயிர்களை காவு வாங்கிய ஜோக்கர் ஃபெலிக்ஸ் ராக்கர்.
physically, mentally, emotionally he is a bad guy என கேப்ஷனோடு ரீல்ஸ் போட்டு கெத்து காட்டிய இன்ஸ்டா பிரபலம், நாட்டையே அதிரவைத்து இரட்டை கொலைகாரனாக மாறியது எப்படி..?
கொல்லப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பனீந்திர சுப்ரமணி, மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி வினுகுமார்.
சம்பவம் நடந்த அன்று 36 வயதான பனீந்திராவும், 40 வயதான குமாரும் அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளனர். அப்போது தீடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு மர்ம கும்பல் பனீந்திராவை கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டிருக்கிறது.
அந்த தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற பனீந்திராவை விடாமல் துரத்தி வெட்டி சரித்திருக்கிரார்கள். இந்த கொடுரத்தை தடுக்க வந்த வினுகுமாரையும் வெட்டி வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். மேலும் சம்பவம் நடந்த சமயத்தில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது தான், சமூக வலைதளத்தை கலக்கிய மிகவும் பரிட்சையமான ஒரு முகம் நடந்த மொத்தத்தையும் முன்னின்றி முடித்திருப்பது தெரிந்திருக்கிறது.
அது வேறு யாருமல்ல.... இன்ஸ்டா பிரபலம் ஜோக்கர் ஃபெலிக்ஸ் எனப்படும் ஃபெலிக்ஸ் தான்.
உடனே தனிப்படை அமைத்து தப்பி ஓடிய ஃபெலிக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது தான் நடந்த இரட்டைக்கொலைக்கான முழு காரணமும் தெரிந்திருக்கிறது.
பெலிக்ஸ் சோசியல் மீடியாக்களில் முக்கிய நபராக அறியப்படும் ஒரு புல்லிங்கோ செலபிரிட்டி...
முகம் முழுக்க நிரம்பி வழியும் டேட்டோக்களோடு, இரு விரல் போதைமயமான கஞ்சாவோடு, காரசாரமாக ரீல்ஸ் போடுவது தான் இவரின் பிரதான வேலை...
ஆரம்பத்தில் ஆக்ஷனில் மட்டும் இறங்கிய ஃபெலிக்ஸ் ரொமான்ஸையும் விட்டு வைக்கவில்லை... காதலியோடு சேர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்தார்.
இதனால் இவருக்கென தனி புல்லிங்கோ ஃபாலோவர்ஸ் உண்டு.
இப்படி இன்ஸ்டா, ரீல்ஸ், என சுற்றி வரும் ஃபெலிக்ஸ், சில மாதங்களுக்கு முன் பனீந்திர சுப்ரமணியின் நிறுவனமான ஏரோனிக்ஸ் மீடியாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
அதன் பிறகு கம்பெனியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறிய ஃபெலிக்ஸ், தனியாக தொழில் தொடங்கி இருக்கிறார்.
ஆனால் ஃபெலிக்ஸ் நிறுவனத்திற்கு அவ்வளவாக ஆர்டர்கள் வரவே இல்லை. என்ன காரணம் என்று அலசிய போது தான் ஃபெலிக்ஸ்க்கு உண்மை தெரிந்திருக்கிறது. முன்னாள் MD பனீந்திர சுப்ரமணியா தான், தனது நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை எல்லாம் பறித்து கொண்டிருக்கும் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் கொதித்து போன ஃபெலிக்ஸ், ஆர்டர்கள் பற்றி நேரில் பேசி ஒரு முடிவு செய்ய வேண்டும் என பனீந்திராவை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.
அதற்கு பனிந்திராவும் சம்மதிக்க, சம்பவம் நடந்த அன்று அலுவலகத்திலேயே மீட்டிங்கிற்கு வர சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஃபெலிக்சின் திட்டம் பேச்சு வார்த்தை அல்ல.... அமைதியாக உள்ளே சென்ற ஜோக்கர் ஃபெலிக்ஸ் சற்று நேரத்தில் வில்லனாக மாறி கூட்டாளிகளை அழைத்து ஆக்ஷனில் இறங்கி பனீந்திராவையும், குமாரையும் வெட்டி கொலை செய்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.
விசாரனை முடிவில் ஜோக்கர் ஃபெலிக்ஸ், வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.