வெளுத்து வாங்கும் கனமழை - மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

x

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. 3 ஆவது நாளாக காற்றுடன் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். || ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆவது நாளாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். || கடையநல்லூரில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமானது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது., இதன் காரணமாக விற்பனைக்காக கொட்டி வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் சேதம் அடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்