பிரியாணி கடை திறப்பு விழாவில் கலவரம்... Buy one get one ஆஃபரால் பரபரப்பு...
கையில பை... முகத்துல ஒரு ஏக்கம்... அடிக்குற வெயிலயும் பொருட்படுத்தாம... ஒரு மைல் தூரத்துக்கு நீண்டுருந்த கியூவ பார்த்து ஏதோ ரேஷன் கடையில தக்காளி வாங்க வந்த கூட்டம்ன்னு மட்டும் தப்பா நினைச்சிடாதீங்க...
ஏன்னா நம்ம வந்திருக்க இடம் அப்டி...
ஆமாங்க , பிரியாணி தரிசனத்துக்காக பசியோட வந்த பக்தர்கள்தான் இவங்க எல்லாரும்...
Non veg-ல எத்தனையோ வெரைட்டி இருந்தாலும்... அது எல்லாத்தையும் அடிச்சு தூக்கி நம்பர் ஒன்ல இருக்குறது அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்குமே பிரியாணி மட்டும்தான்...
நாட்டுலயும், வீட்டுலயும் ஆயிரத்து எட்டு பிரச்சனை இருந்தாலும் பிரியாணின்னு சொன்னா போதும்... மனசு ரெண்டும் ரா ரான்னு சாப்பிட கூப்பிடும்...
அப்டி, பிரியாணி சாப்பிடுறதுக்கு டோக்கன் வாங்கிட்டு மணிகணக்குல க்யூல நின்னுட்டு இருந்த ஒரு கூட்டம்... திடீர்ன்னு ஆளுக்கொரு பக்கமா தெறிச்சு ஓட அந்த இடமே கலவர காடா மாறிச்சு...
பிரியாணி பிரியர்களுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க சுடச்சுட விசாரணையில களமிறங்குனோம்...
வேலூர் மாவட்டம் , காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பக்கத்துல... ஒரு பிரபலமான பிரியாணி உணவகம் அவங்களோட புதுக்கிளைய தொறந்துருக்காங்க...
திறப்பு விழா offer-ஆம் ஒரு மட்டன் பிரியாணி வாங்குனாம் ஒரு சிக்கன் பிரியாணி free... ஒரு சிக்கன் பிரியாணி வாங்குனா இன்னொரு சிக்கன் பிரியாணி freeன்னு ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிருக்காங்க...
சண்டே அதுவுமா இப்டி ஒரு ஆப்பர் கிடச்சா யாருதான் சும்மா விடுவாங்க... மொத்தம் ஊரும் கட்டபையோட கட முன்னாடி ஆஜர் ஆகிருக்காங்க...
நேரம் போக போக கியூவும் நீண்டுகிட்டே போனதால அந்த இடத்துல கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுருக்கு... சுதாரிச்சுகிட்ட கடை உரிமையாளர் முதலுக்கு மோசமாகிட போகுது பயந்து பாதி ஷட்டர மூடிவைச்சி பத்திரமா கள்ளக்கட்டி இருக்காரு...
இதனால பிரியாணி கிடைக்குமோ கிடைக்காதோன்னு பதறிபோனவங்க நீ நான்னு முந்தியடிச்சு ஷட்டர்குள்ள அத்துமீறி நுழையவும் பதற்றம் மேலும் அதிகரிச்சுருக்கு...
ஒருகட்டத்துல காவல்துறையாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதிருக்கு... இத கேள்விபட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியா பிரியாணி கடைக்கு விரைந்து வந்து கடைக்கு அதிரடியா சீல் வைக்க உத்தரவிட்டு இருக்காரு...
இது தொடர்பா மேற்கொண்ட விசாரணையில கடையோட உரிமையாளர் முன் அனுமதி வாங்காமலே கடை திறந்திருக்கிறதும், கூட்டம் கூடும்னு தெரிஞ்சிருந்தும் அலட்சியமா செயல்பட்டு இருக்கிறதும் தெரிய வந்துருக்கு. மேலும், அந்த பகுதியில பணியிலிருந்த காவலர்கள்கிட்டயும் தொடர் விசாரணை நடத்தி வர்றாங்க..
திறப்பு விழா offer ஏ கடைசியில ஆப்பா மாறிடுச்சுன்னு இப்போ நெட்டிசன்கள் கலாய்ச்சுட்டு வராங்க...