ஓங்கூர் பாலத்தில் பழுது - ஒருவழிப்பாதை ஆனதால் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி ஓங்கூர் பாலம் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நத்தை போன்று ஊர்ந்து சென்றன. ஓங்கூர் பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
Next Story