ஹிஜாப் போராட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புகழ்பெற்ற ஈரானிய நடிகை தாரனே அலிதூஸ்டி 18 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தார்...
ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் விவகாரத்தால் கலாச்சார காவல் படையால் கைது செய்யப்பட்டு மர்ம மரணம் அடைந்த நிலையில், அவருக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பங்கேற்ற சிலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து விமர்சனம் செய்ததற்காக அலிதூஸ்டி கைது செய்யப்பட்டார்.
இதற்காக ஈரானிய காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், 18 நாட்களுக்குப் பிறகு அலிதூஸ்டி ஜாமீனில் வெளிவந்தார்.
அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற "தி சேல்ஸ்மேன்" திரைப்படத்தில் நடித்துள்ள அலிதூஸ்டி, பல்வேறு பிரபலமான ஈரானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது...