சுவாதி நட்சத்திரகாரர்களுக்கான பரிகார தலம் - திருமண வரன் அமைய தங்கத்தில் பொட்டு சாற்றி வழிபாடு - காரைக்குடி கொற்றவாளீஸ்வரர் கோயிலின் சிறப்புகள்

x

சுவாதி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய காரைக்குடி கொற்றவாளீஸ்வரர் கோயிலின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்....

அதிக ஒளி வாய்ந்த இளமையான நட்சத்திரமென்று சொல்லப்படுவது சுவாதி நட்சத்திரம்...

இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்தும் அறிந்திருந்தாலும், தன்னடக்கத்தோடு செயல்படுபவர்களாகவும், எதையும் நிதானமாக அணுகுபவர்களாகவும் இருப்பர்...

சுவாதி நட்சத்திரத்திற்கு அதிபதி ராகு பகவான்...

சுவாதி நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய கோயிலாக இத்தலம் உள்ளது..

முன்பொரு காலத்தில் காளையார் கோயில் பகுதியை ஆண்டு வந்த பாண்டிய மன்னன், காளீசர் அருளால் கொற்ற வாளை பெற்றிருந்ததோடு...

போர்கள் பல புரிந்து அதன் மூலம் வெற்றியினையும் கண்டானாம்...

அந்த வாளை வைத்தே திருவிளையாடல் நடத்த திட்டமிட்டார் ஈசன்...

ஒரு முறை காட்டில் தென்பட்ட மாயமானை துரத்தி செல்லும் போது வாளை தவறவிட்டான் பாண்டிய மன்னன்...

தவற விட்ட வாளை தேடி அலையும் போது, புலி ஒன்று அந்தணனை தாக்கும் காட்சியை கண்டதால் அவரை காப்பாற்ற அருகில் சென்றான்...

அப்போது சட்டென்று அந்தணரும், புலியும் மறைந்தனர்..அதே இடத்தில் தான் தவற விட்ட வாள் சுயம்பு லிங்கத்தின் அருகில் இருப்பதை கண்டான்...

ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த மன்னன் அங்கேயே ஆலயம் எழுப்பி இறைவனை கொற்றவாளீஸ்வரன் என்றழைத்ததாக கூறுகிறது வரலாறு...

தீவிர சிவ பக்தரானவர்கள் சிவகுப்தன், சுதன்மை தம்பதி...

இவர்களின் வயல், அறுவடைக்கு தயாராக இருந்த போது அவர்களது மகளை காவலுக்கு அனுப்பி இருந்தனர்...

மகள் சிறு பிள்ளை என்பதால் விளையாட சென்று விட்டாள்.. அப்போது அம்பாளே இவர்களின் நெல்லை சிறுபிள்ளை வடிவில் வந்து காத்தாள் என்றும் அன்று முதல் அம்பாள் நெற்காத்த அம்மன், நெல்லையம்மன் என்று அழைக்கப்பட்டாளாம்...

மூலவராக கொற்றவாளீஸ்வரன் சுயம்பு லிங்கமாகவும், மகா மண்டபத்தில் ஆடல்வல்லானாகவும் வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு...

இக்கோயில் அம்பாள் நெல்லையம்மன் பிரதான சக்தியாக கிழக்கு முகமாக வீற்றிருக்கிறாள்...

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து மூலவரை மனமுருக வேண்டினால் நினைத்த காரியம் கைகூடுமாம்...

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த, சரியாக பேச்சு வராத குழந்தைகளை இங்கு அழைத்து வந்து உச்சிகால பூஜையில் தயிர் சாதம் படைத்து வழிபட முன்னேற்றத்தை காணலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை...

அம்பாளுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றி வழிபட திருமண தடைகள் அகலும்...

அதிபதி ராகு பகவான் என்பதால் நாக கோயில்களுக்கும், காளஹஸ்தி, திருபாம்புரநாதரர் கோயிலுக்கும் சென்று வழிபடுவது கூடுதல் நலனை தரும்...

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு வேண்டிய சிறிய உதவியை செய்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கும்....

கோயிலானது காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி இரவு 8 வரையும் திறந்திருக்கும்...

காரைக்குடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் கோயிலை வந்தடையலாம்...

விசாகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய கோயிலையும், அதன் சிறப்புகளையும் நாளைய தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்