"மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை மிக முக்கியம்!" - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் தேவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அவர், மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை என்பது இனி புறக்கணிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான விஷயம் ஆகும் என்றார். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு, மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்றும், அதனை கட்டுப்படுத்த விரிவான கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்றார். தொடர்ந்து, பெண்களுக்கான சம உரிமை குறித்துப் பேசிய மோகன் பகவத், பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story