தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'... இன்னும் 5 நாட்களுக்கு வெளுக்கப் போகுது 'அதி கனமழை'..
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
இது நாளை காலை, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம்- புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக வட தமிழக கடலோர பகுதிகளில்
மழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.