கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

x

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 4ஆம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. குமரி மேற்கு கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளான கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, தேங்காய்ப்பட்டிணம், கருங்கல், காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவிலும் மழை நீடித்தது. தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்