"அனைத்து தேர்தல்களுக்கும் தயார்.." ஜே.பி. நட்டா பேட்டி
2024 மக்களவைத் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களுக்கும் தயாராக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனது தொடர்பு பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. இதையொட்டி உத்தர பிரதேசத்தில், உணவுடன் சந்திப்பு என்ற பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. அந்த பிரச்சாரத்தின்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று கட்சித் தொண்டர்களுடன் உணவு அருந்துவார்கள். அதன்படி, நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசின் திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க தொண்டர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கேட்டறிந்ததாக கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களுக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.