ஈபிஎஸ் பேசியதும் கலைந்து சென்ற மக்கள்.. காலியான பந்தல், சாப்பிட கூட யாரும் இல்லை.. காத்து வாங்கிய மொய் கவுண்டர்கள்
- மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்திய திருமண விழாவில், பொதுமக்கள் பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பந்தல், மொய் டெக் கவுண்டர்கள் காலியாக கிடந்தன.
- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே T.குன்னத்தூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமண நிகழ்ச்சி நடத்தினார்.
- அவரது மகள் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் திருமணத்தை நடத்தி வைத்தார்.
- திருமண விழாவுக்காக ஒன்றரை லட்சம் பத்திரிக்கைகள் விநியோகித்திருந்ததால், ஒரு லட்சம் பேருக்கு ஏற்றார் போன்று பந்தல், பிரமாண்ட உணவு அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
- ஆனால், ஈபிஎஸ் பேசிவிட்டு சென்ற உடனே, அங்கு இருந்தவர்கள் வெளியேறினர். இதனால், பந்தல் காலியாக காணப்பட்டது.
- உணவருந்த கூட ஆளில்லாத நிலை இருந்தது.
- மொய் செய்ய எவரும் வராததால், மொய் - டெக் கவுண்டரில் இருந்தவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டும், சிலர் தூங்கிக் கொண்டும் இருந்தனர்.
Next Story