ராஜிவ் வழக்கிலிருந்து விடுதலையாகி விவசாயி அவதாரமெடுத்த ரவிச்சந்திரன்
ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த ரவிச்சந்திரன் விடுதலையாகி வெளியே வந்த நிலையில் தன் சொந்த ஊரில் விவசாய வேலைகளில் ஈடுபடத் துவங்கியிருக்கிறார்.
ரவிச்சந்திரனின் சொந்த ஊர் விளாத்திகுளத்துக்குப் பக்கத்தில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டி.
மதுரை சிறையிலிருந்து விடுதலையான ரவிச்சந்திரனை ஊரே வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஊராரின் அன்பில் நனைந்த ரவிச்சந்திரன், விவசாயத்தில் ஈடுபடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
சூரப்பநாயக்கன்பட்டியில் தன் குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயப் பணிகளை துவங்கியிருக்கிறார் ரவிச்சந்திரன்.
முன்னதாக ரவிச்சந்திரனை சந்திக்கச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசுவை தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்று ரவிச்சந்திரன் தனது விவசாய கனவை வெளிப்படுத்தியிருக்கிறார்....
Next Story