போலீசைக் கண்டா பயமில்லை..! 500 கிலோ கஞ்சாவை தின்ற எலிகள்.. போலீஸ் பதிலை கேட்டு அசந்து போன நீதிபதி

x

மெகா கஞ்சா வேட்டை நடத்தி 581 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தல் காரர்களிடம் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மதுரா காவல் துறை பறிமுதல் செய்தது. கடத்தல்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட விசாரணையில், குற்றத்தை நிரூபித்து தண்டனை அறிவிக்க நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் மதுரா காவல்துறையோ வெறும் கஞ்சா மாதிரிகளை மட்டுமே சமர்ப்பித்தது. இது குறித்து நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மதுரா காவல்துறை, காவல்நிலைய சேமிப்பு அறையில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் தான் கிலோ கணக்கில் இருந்த கஞ்சாக்கள் அனைத்தையும் உண்டு தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறிய அளவில் இருப்பதால் அந்த எலிகளுக்கு போலீசைக் கண்டு துளியும் பயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் பொறுமையாக கேட்ட நீதிபதிகள், எலிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் படியும், காஞ்சாவை எலிகள் தான் தின்று விட்டன என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யும்படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டு நவம்பர் 26ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்