ரேஷன் கடைகளில் எடை குறைவு புகார்..! "ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது" - ஜெ.ராதாகிருஷ்ணன்
- ரேஷன் கடைகளில் ஆய்வின்போது எடை குறைவு என்று கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
- கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், சிங்கிரிகுடியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம், பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
- தொடர்ந்து கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், இரண்டாயிர விளாகம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பின்னர், கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு லாரிகளை வழங்கினார்.
- முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எடைகுறைவாக இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story