ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : "சந்தேகம் இருந்தால் சமைத்துக் கொடுங்கள்.. சாப்பிடுகிறேன்" - பொதுமக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பச்சூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டனர்.
  • தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தாசில் தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாகவும், நல்ல அரிசி தான் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அதிகாரிகள் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர்.
  • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்