ராணியின் உடல்..இன்று மதியம்... வெளியான முக்கிய தகவல்
இங்கிலந்து ராணியின் உடல், ஸ்காட்லாந்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஹோலிரூட் ஹவுஸ் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலை பால்மரோலில் இருந்து லண்டன் கொண்டு செல்லும் நிகழ்வுக்கு 'ஆபரேசன் யுனிகார்ன்' என பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று காலை 10 மணிக்கு பால்மரோலில் இருந்து புறப்பட்ட சவப்பெட்டி, அபெர்டீன் நகரின் டூட்டி பூங்கா வந்ததும், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
எடின்பரோவில், முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனும், மற்ற கட்சி தலைவர்களும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
6 மணி நேர பயணத்திற்கு பிறகு ஹோலிரூட் ஹவுஸ் அரண்மனைக்கு சென்றதும், அங்குள்ள ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அரண்மனையில் உள்ள சிம்மாசன அறையில் ராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டது.
இன்று மதியம் ஹோலிரூட் ஹவுஸ் அரண்மனையில் இருந்து புறப்படும் ராணியின் சவப்பெட்டி, செயின்ட் ஜெய்ல்ஸ் கதீட்ரலுக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு, அரச குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவர்.
தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
வரும் 19ஆம் தேதி ராணியின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்.