இந்தியாவுக்கு அன்று அதை வழங்கியிருந்தால்... இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது - இலங்கை அதிபர்
இந்தியாவுக்கு அன்று அதை வழங்கியிருந்தால்... இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது... இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இடங்களை ஆய்வு செய்தார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், அடுத்த தலைமுறையினருக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் என்றும் பேசினார். மேலும் அன்று இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், இன்று இலங்கை எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்
Next Story