ரம்ஜான் பண்டிகை..வியாபாரம் படுஜோர்.. விற்பனைக்கு குவிந்த ஆடுகள்..!

x

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நள்ளிரவு முதல் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில், 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில், வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்