உலகின் ஆக சிறந்த கணித மேதை ராமானுஜத்துக்கு இப்படியொரு வீக்னெஸ்ஸா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்..!
1887ல் ஈரோட்டில் பிறந்த சீனிவாச ராமானுஜர், கும்பகோணத்தில் வளர்ந்தார். அவரின் தந்தை சீனிவாசன் ஒரு ஜவுளி கடையில் பணியாற்றினார். இளம் வயதிலேயே கணிதத்தில் மேதமையை வெளிப்படுத்திய ராமானுஜர், கும்பகோணம் நகர மேல் நிலை பள்ளியில் பயின்றார்.
அவரின் வீட்டில் தங்கிப் படித்த இரண்டு கல்லூரி மாண்வர்களின் கணித பாட நூல்களை 11 வயதில் முழுமையாக கற்று தேர்ந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தனது 13 வது வயதில் டிரிக்னாமெட்ரியில் தேர்ச்சி பெற்றார்.
பள்ளி கல்வியை முடித்த பின், கல்வி உதவித் தொகை பெற்று, கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். கணிதத்தில் பிரகாசித்த ராமானுஜர், இதர பாடங்களில்
அக்கரை காட்டாமல், தோல்வியடைந்தார்.
பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கணிதம் பயின்றார். ஆனால் ஆங்கிலம் உள்ளிட்ட இதர பாடங்களில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததால், இளங்கலை பட்டம் பெற முடியாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார். 1909ல் ஜானகியை மணந்தார்.
சென்னை பல்கலைகழகத்தில் கணித ஆராய்ச்சி பிரிவில் சில காலம் பணியாற்றியவர் பின்னர் 1912ல் சென்னை துறைமுக கழகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். கணித ஆராய்ச்சி களை தீவிரமாக தொடர்ந்த ராமானுஜர், பிரிட்டனில் இருந்த புகழ்பெற்ற கணித நிபுணர் ஹார்டியுடன் கடிதத் தொடர்பு கொண்டார்.
ராமானுஜரின் மேதமையை உணர்ந்து கொண்ட ஹார்டி, 1914ல் அவரை கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு வரவழைத்து, அங்கு கணித ஆராய்ச்சியில் ஈடுப்பட அனைத்து உதவிகளையும் அளித்தார்.
சுமார் ஐந்து ஆண்டுகள் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஏராளாமன கணித சூத்திரங்களுக்கு விடை கண்டு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவரின் ஆய்வுகளை சமர்ப்பித்து கேம்ரிஜ்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரின் உடல்நலம் கடுமையாக பாதிகப்பட்டதால், 1919ல் இந்தியா திரும்பினார். 1920ல் உடல்நலக் குறைவினால், தனது 33 வயதில் கும்பகோணத்தில் காலமானார்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கணித மேதை ராமானுஜன் பிறந்த தினம், 1887 டிசம்பர் 22.