"அங்கன்வாடி குழந்தையை கடத்த முயன்றேனா?" - போலீசிடம் அழுது புலம்பிய மூதாட்டி

x

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்திலிருந்து குழந்தையை மூதாட்டி ஒருவர் கடத்த முயன்றதாக கூறி, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த பைரோஸ் அமீன் என்பவரது மகன், முகமது ரயான் என்ற சிறுவன் பயின்று வருகிறார் இந்நிலையில், சிறுவன் அங்கன்வாடி மையத்தை விட்டு வெளியில் வந்த போது, அங்கு நின்றிருந்த காளியம்மாள் என்ற மூதாட்டி, அந்த சிறுவனை கூட்டிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மூதாட்டியை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கேணிக்கரை போலீசார், மூதாட்டியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்