ஜனவரியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் - வெளியான புதிய தகவல்
ஜனவரியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் - வெளியான புதிய தகவல்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 15 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. கும்பாபிஷேக விழாவை காண திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உணவக உரிமையாளர்கள் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள், முன்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பைசாபாத் மற்றும் அயோத்தியில் சுமார் 150 உணவகங்கள் உள்ளன. இதில் 10 ஆடம்பர ஹோட்டல்கள், 25 பட்ஜெட் ஹோட்டல்கள், 115 எகானமி ஹோட்டல்கள், 35 அங்கீகரிக்கப்படாத விருந்தினர் மாளிகை என மொத்தம் 10 ஆயிரம் அறைகள் உள்ளன. கூடுதலாக, 35 அறைகளைக் கொண்ட 4 அரசு விருந்தினர் மாளிகைகளும் உள்ளன. தற்போது கட்டப்படும் 50 சிறிய விருந்தினர் மாளிகைகள், நவம்பர் மாதத்திற்குள் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.