மருத்துவமனை ஊழியருக்கு எமனான AC.. "கால்தான் சேதம்-னு சொன்னாங்க..கடைசில பிணமா கொடுத்துட்டாங்க.."கதறும் குடும்பத்தினர் - ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் 62 வயதான திருநாவுக்கரசு. இவர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வும் பெற்றிருக்கிறார்...
  • பின்னர், முதலமைச்சர் காப்பீடு திட்டப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக மீண்டும் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு நேர்ந்துள்ள சோகம் அனைவரையும் கலங்கடித்துள்ளது....
  • 62 வயதான திருநாவுக்கரசுக்கு மூன்று பிள்ளைகள்... முதலும், கடைசியுமான இரு பெண் குழந்தைகளை திருமணம் செய்து கரையேற்றிய நிலையில், 2ஆவதாக பிறந்த மகனையும் கரையேற்றி வைக்க 62 வயதிலும் ஓடிக் கொண்டு இருந்திருக்கிறார் அவர்....
  • இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கம் போல மருத்துவமனைக்கு கிளம்பிய அவர், மருத்துவமனையில் அன்றைக்கான பணிகளை முடித்து விட்டு மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார்...
  • இதற்காக அறையில் இருந்து வெளியே வந்த திருநாவுக்கரசிடம் மேலே இருந்து ஏசி வடிவில் வந்த எமன், அவரின் தலையில் பேரிடியாக விழுந்து உயிரை பறித்திருக்கிறது..
  • தாமரைச் செல்வி, உயிரிழந்தவரின் மகள்
  • "காலைல வேலைக்கு கிளம்பிபோன மனுசன, நைட்டு பிணமா தூக்கிட்டு வந்தோம்"
  • "எங்க வயிறு எல்லாம் எரியுது"
  • "அந்த ஏசி எப்படிங்க மேல இருந்து விழும்?"
  • "எங்க அப்பா இல்லனா, நாங்க இல்ல"
  • "இப்ப அவர் இல்லைனு நினைச்சாலே கதி கலங்குது..."
  • திருநாவுக்கரசு பணிபுரிந்த வந்த தளத்தில் இருந்து 3 ஆவது மாடியில், புது அறை ஒன்றை புனரமைக்கும் பணியினை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்...
  • இதில், பழைய ஏசியை அப்புறப்படுத்தும் போது ஒரு ஏசி 3ஆவது மாடியில் இருந்து விழுந்து, கீழே இருந்த திருநாவுக்கரசின் உயிரை பறித்தது அவரின் குடும்பதினரை கதற வைத்துள்ளது...
  • "வேலை முடிஞ்சு மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு கிளம்பியிருக்காரு"
  • "3 ஆவது மாடியில அறையை புனரமைக்கும் பணி செஞ்சுட்டு இருந்திருக்காங்க"
  • "அங்க இருந்து எப்படி சார் ஏசி கழண்டு கீழே விழும் ? "
  • " ஏசி தலைல விழுந்ததுல எங்க அப்பா துடி துடிச்சுருக்காரு"
  • 3 ஆவது மாடில இருந்து தலையில ஏசி விழுந்ததில் ரத்தம் வழிய துடித்துடித்த திருநாவுக்கரசை மருத்துவமனையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்...
  • ஆரம்பத்தில், சின்ன காயங்கள் தான் எனவும், கால் தான் சிறுது சேதம் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆறுதல் படுத்திய மருத்துவர்கள், தன் தந்தையை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்ற போதே சிறிளது சந்தேகம் இருந்தது என தெரிவித்த குடும்பத்தார்... தற்போது எங்கள் தந்தை எங்களிடம் இல்லை என கதறியது அனைவரையும் கலங்கடித்தது...

Next Story

மேலும் செய்திகள்