'புதிய பட்ஜெட்' என நினைத்து பழைய பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்.. அதுக்கு கொடுத்த விளக்கம் தான் ஹைலைட்

x

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை வாசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் கடந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்த நிலையில், தலைமை கொறடா மகேஷ் ஜோஷி அதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து அவையில் இருந்த பாஜகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான புதிய பட்ஜெட் உரையை வாசிப்பதற்காக, முதல்வர் அசோக் கெலாட் கால அவகாசம் கேட்டதால், அவையை அரைமணி நேரம் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

எனினும், எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல் பட்ஜெட்டை முதல்வர் வாசித்தது எப்படி எனவும், பட்ஜெட் கசிந்து விட்டதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்.

இந்நிலையில், அரைமணி நேரம் கழித்து பேரவையில் புதிய பட்ஜெட் உரையை வாசித்த முதல்வர் அசோக் கெலாட், தனக்கு வழங்கப்பட்ட உரையில் ஒரு பக்கம் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்