முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பணமோசடி வழக்கை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக ரவீந்தரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் விஜய நல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இது தொடர்பான விசாரணையின் போது அப்போதைய பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி விட்டதாக விஜய நல்லதம்பி புகார் அளித்தார்.
- இதையடுத்து கடந்த வருடம் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
- தலைமறைவான விஜய நல்ல தம்பியை கடந்த வாரம் கோவில்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.
- இது தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பணமோசடி வழக்கை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story