கூடையில் ரூ.2 கோடி பணம்.. ரூ.71 லட்சம் தங்கம்.. தங்கை திருமணத்துக்கு ரூ.8 கோடிக்கு சீர்.. ஜாம் ஜாமென நடத்திய அண்ணன்கள்
- இந்தியாவில் வரதட்சணை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது.
- அங்குள்ள நாகௌர் மாவட்டத்தில் உள்ள திங்காசாகர் கிராமத்தை சேர்ந்த பன்வாரி தேவிக்கு மார்ச் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
- இந்த திருமணத்துக்கு தேவியின் 4 சகோதரர்கள் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்துள்ளனர்.
- அந்த தொகையில், 2 கோடியே 21 லட்ச ரூபாய், கூடையில் வைத்து கொண்டு வரப்பட்டு, மேடையிலேயே ரொக்கப் பணமாக கொடுக்கப்பட்டது.
- இதவிர, நான்கரை கோடி மதிப்புள்ள நிலம், 71 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ வெள்ளி என மொத்தம் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
- மேலும், 7 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டர் ஒன்றும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
Next Story