குற்றாலத்தை தொடர்ந்து.. புரட்டி எடுக்கும் கோடை மழை - தவிக்கும் மக்கள்
கனமழையால் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில், பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் மழை அடித்து பெய்த நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் 16 வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பேருந்து, தனியார் வாகனம் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து ஜேசிபி இயந்திரத்துடன் வந்த
நெடுஞ்சாலை துறையினர் கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் போராடி, சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாறைகள் அகற்றப்பட்ட நிலையில், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
Next Story