குளம் போல் தேங்கிய மழை நீர்..போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி.
குளம் போல் தேங்கிய மழை நீர்..போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி. ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரை அகற்றக் கோரி திடீரென மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் பலத்த மழையால் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றி உடனடியாக போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கூறி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story