இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை - மண் சரிந்து அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், உபதலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வசம்பள்ளம் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து, மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து தடுப்புச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story