ரயில்வே ஊழியர் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் கொடி அசைப்பவராக பணிபுரிந்தவர், ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி நேதாஜி காலனியைச் சார்ந்தவர் சுவாமிநாதன்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக பணிபுரிந்து வந்த இவர், கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story