ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிரொலி... "4 மாநிலங்களில் போராட்டம் ரத்து" - இது தான் காரணமா..?

x

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்தியா முழுவதும் மவுன போராட்டம் இன்று நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் மட்டும் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது. அந்த 4 மாநிலங்களிலும் ஜூலை 16ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்