மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ராகுல் காந்தி அதிரடிதிட்டம்

x

மத்திய அரசு தவறான கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க, கர்நாடகாவில் 21 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதும் மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் செல்ல உள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து மட்டும் 511 கிலோ மீட்டர் தூரத்தில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை தொடர்கிறது. மைசூரு மாவட்டத்தின் நாஞ்சன்கூடுவில் தொடங்கி 8 மாவட்டங்கள் வழியாக தெலுங்கானா செல்ல உள்ளார். 21 நாட்கள் மேற்கொள்ளும் இந்த பயணத்தில், பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாகவும், தவறான கொள்கைகளை மத்திய அரசின் செயல்படுத்துவதாக எடுத்துரைக்க உள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்