"மனித உரிமைகளின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் அரசு உள்ளது" - அமைச்சர் ரகுபதி பெருமிதம்
சர்வதேச மனித உரிமைகள் தின கொண்டாட்ட நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, மனித உரிமைகளின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் அரசு உள்ளது எனவும், சட்டத்தின் பலன் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான மக்களின் அரசாக தமிழக அரசு விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், சட்டங்களை நவீனப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரிகள் துவங்க உள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.
Next Story