"இந்திய வடிவமைப்பை பிரதமர் மோடி சிதைக்கிறார்"... "என்னுடைய அலைபேசியை உளவு பார்க்கிறார்கள்.." - ராகுல் காந்தி
- ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் "21ம் நூற்றாண்டில் கற்றலுக்காக கவனித்தல்" என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- அப்போது, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தாங்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
- உளவு பார்க்க தன்னுடைய அலைபேசியில் பெகாசஸ் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாகவும், தொலைபேசியில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க தனக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
- ஊடகம், நீதித்துறை போன்றவற்றை பாஜக அரசு கைப்பற்றி அவற்றை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
- இந்திய வடிவமைப்பை பிரதமர் மோடி சிதைத்து வருவதாகவும் நாட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத சித்தாந்தங்களை திணித்து வருவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
- ராகுல் காந்தியின் இந்த பேச்சு பொய் என்று கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அவர் இந்தியாவை அவதூறு செய்வதாகவும் சாடியுள்ளார்.
- அந்நிய மண்ணிற்கு சென்று கண்ணீர் விடும் தனது பணியை ராகுல் காந்தி மீண்டும் செய்திருப்பதாக தெரிவித்த அனுராக் தாக்கூர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் முழுவதும் இந்தியா மீதான மதிப்பு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.
Next Story