அரசுக்கல்லூரியில் மீண்டும் ராகிங் கலாச்சாரம்-வெளியான வீடியோ ..!

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செயல்பட்டு வருகிறது அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி. இந்த கல்லூரியில் சுமார் 3000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இதில் பலர் வெளியூர் மாணவர்கள். செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் தான் செய்யாறில் உள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ராக்கிங் கலாச்சாரம் இருந்து வந்திருக்கிறது. ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் சாட்டையால் அடித்து துன்புறுத்துவது இங்கே வழக்கமான ஒரு பணிஷ்மன்ட்.

அப்படித்தான் சம்பவம் நடந்த அன்றும் கல்லூரியில் சில சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களிடம் பணிவிடை வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைகளை ஜுனியர் மாணவர்கள் செய்ய முடியாது என கண்டிப்பாக கூறி தட்டி கழித்திருக்கிறார்கள்.

இதனால் கடுப்பாகி போன சீனியர்கள், கல்லூரியில் நடந்த கலவரத்திற்கு ஹாஸ்டலில் வைத்து ரிவெஞ்ச் எடுக்க நினைத்திருக்கிறார்கள். அன்றிரவு கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஜூனியர்களை வரிசையில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து வெளுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த சக மாணவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள்.

இதனை கண்ட கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட எட்டு சீனியர் மாணவர்களிடம் விசாரனை நடத்தி அவர்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.கல்லூரியை படிப்பை கற்றுதரும் ஒரு இடமாக பார்க்காமல், கெத்து காட்டுவதாக நினைத்து கொண்டு ரவுடிசத்தை வெளிக்காட்டுவதாலேயே இது போன்ற விபரீதங்கள் நடப்பதாக பலரும் குற்றம் சாற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்