ரக்கூன் நாய்களிலிருந்து தோன்றியதா கொரோனா வைரஸ்? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு
- 2019 இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிவிட்டது.
- வைரஸ் சீனாவின் உகான் வனவிலங்குகள் இறைச்சி சந்தையில் இருந்து பரவியிருக்கிறது எனக் கூறப்பட்டாலும், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த விலங்கிலிருந்து பரவியது என்பது உறுதியாக செய்யப்படவில்லை.
- வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்பட்டாலும் இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கிறது.
- இப்போது அரிசோனா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், உகான் வனவிலங்குகள் சந்தையில் ரக்கூன் நாய்களிலிருந்து வைரஸ் வெளிப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில், உகான் சந்தைப் பகுதியில் விலங்குகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், ரக்கூன் நாய்களில் காணப்பட்ட மரபணு மாதிரிகள், மனிதர்களிடம் பரவிய வைரசின் மரபணு மாதிரிகளுடன் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story