ரக்கூன் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதா கொரோனா வைரஸ்..? புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
- சீனாவின் ஊஹான் நகரில் 2019இன் இறுதியில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவது பரவிய பின், இதுவரை 68 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
- ஊஹான் நகரின் சந்தை ஒன்றில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளைப் பற்றிய புதிய ஆய்வு முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த மாதிரிகளில், கொரோனா வைரஸின் மரபணுக்களுடன், ரேக்கான் நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் மரபணுக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- சில மாதிரிகளில், மனித மரபணுக்களை விட விலங்குகளின் மரபணுக்களின் அளவு மிக அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- விலங்குகளில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதற்கு இது ஆதாரமாக உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
- அமெரிக்க அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், கொரோனாவின் தோற்றுவாய் தொடர்பாக சேகரித்த தரவுகள் அனைத்தையும் வெளியிட வகை செய்யும் சட்ட மசோதாவில் ஜோ பைடன் திங்களன்று கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story