பூனைக்கு வீடு தந்த Rachael... எட்டாவது வள்ளலாக மாறிய பெண்!

x

முல்லைக்கு தேர் தந்த பாரி... மயிலுக்கு போர்வை தந்த பேகன்னு... கடையேழு வள்ளல்கள பத்தி உங்களுக்கு தெரியும்...

இப்போ அந்த வரிசைல பூனைக்கு வீடு தந்த Rachael னு... எட்டாது வள்ளலா ஒருத்தங்க உருவாகிருக்காங்க பாருங்களேன்...

பொதுவா விலங்குகள் மேல ஆர்வம் இருக்கவங்க... வீட்டுல இருக்க ஒரு சிறிய பகுதிலதான் தங்களோட செல்லபிராணிகள வளர்பாங்க... அதுவே செல்லபிராணிகள் மேல இருக்க பாசம் கொஞ்சம் அதிகமானா போதும்... மனுஷங்க தங்களோட சொத்தையே எழுதிவைக்கவும் தயங்கமாட்டாங்க... அப்டி யாராச்சும் இருக்காங்கலானு பாத்தா... அதுக்கு உதாரணமா இருக்காங்க kenyaவ சேந்த cat women.

Kenya இருக்க Nairobiய சேர்ந்தவங்கதான் Rachael Kabue... cat womenன்னு அழைக்கப்படுற இவங்ளுக்கு.... பூனைகள்னா அம்புட்டு பிரியமாம்... ஆரம்பத்துல ரோட்ல இருக்க பூனைகளுக்கு தினமும் சாப்பாடு போட்டுட்டு இருந்தவங்க... so cute, so sweetன்னு பூனைகள பார்த்து இம்பிரெஸ் ஆகி... ஒவ்வொரு பூனையா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருக்காங்க...

ஒருகட்டத்துல பூனைகள குடும்ப உறுப்பினர்களா சேர்த்துகிட்ட Rachael Kabue... தன்னோட வீட்டுல இருக்க 3 bedroom யும் பூனைகளுக்கு எழுதிகொடுத்துட்டாங்கப்பா... கிட்டதட்ட நம்ம Rachael வீட்ல இப்போ...600க்கும் மேற்பட்ட பூனைகள் இருக்காம்... அடங்கப்பா பூனைகள் மாநாடே நடத்தலாம் போலயே...

பூனைகளுக்காக இவ்வளோ பெரிய தியாகம் செஞ்சதுனால தான்... ராக்கேல்-அ... ஊர் மக்கள் எல்லாரும் cat womenன்னு கெத்தா கூப்பிடுறாங்களாம்...



Next Story

மேலும் செய்திகள்