ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு முகாமிட்டு வருகின்றனர். இதன் படி, இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றார்.
Next Story