"ஒரு ஊரையே காலி செய்ய வைத்த குவாரி" ... கொட்டும் மழையில் கால்நடைகளுடன் வெளியேறிய அவலம்

x

ஒசூர் அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், இரண்டாவது முறையாக ஊரைக் காலி செய்து விட்டு குழந்தைகள், கால்நடைகளுடன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரை அடுத்த கொரட்டகிரி கிராமத்தைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகள், கிராமம் வழியாக செல்வதால், சாலைகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த தீர்வும் கிடைக்காததால், ஏற்கெனவே ஒரு முறை ஊரை காலி செய்து, வெளியேறி போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீண்டும் தங்கள் கால்நடைகளுடன் ஊரைக் காலி செய்து விட்டு, ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கினர்.

தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் சமாதானம் அடையாததால் போராட்டம் தொடர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்