"புது வீடுன்னு நம்பி இருக்கிறோம் - திடீர்னு சுவர் இடிச்சு செத்துட்டா யார் பொறுப்பு?" - நரிக்குறவர் இன மக்கள் குற்றச்சாட்டு

x

புதுக்கோட்டை அருகே நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு சார்பில் கட்டப்படும் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்கம்மா சத்திரத்தில் வசித்து வரும் 68 நரிக்குறவர் இனக் குடும்பங்களுக்காக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாகவும் , கட்டுமான பணியின் போது வீடுகள் இடிந்து விழுவதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூடுதலாக பணம் கொடுத்தால் தரமாக வீடுகள் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நரிக்குறவர் இன மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்