குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்த விவகாரம் "முரணான தகவல்கள் தரும் பொதுமக்கள்" சிபிசிஐடி வெளியிட்ட பகீர் தகவல்...
- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனிதகழிவுகள் கலந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாதது குறித்து சிபிசிஐடி போலீசார் பரபரப்பு தகவல்களை முன்வைத்துள்ளனர்.
- இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் கையிலெடுத்துள்ள நிலையில், கிராமமக்கள், ஊராட்சிமன்ற தலைவர் உட்பட சில காவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்கள் தருவதால் குற்றவாளிகளை பிடிக்க இயலவில்லை போலீசார் தெரிவிக்கின்றனர்.
- இந்த விவகாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும், மனிதகழிவு கலந்த குடிநீரை குடித்தனால் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
- இதனால், குழப்பமடைந்த அதிகாரிகள் மருத்துவர்களிடம் அறிக்கை சமர்பிக்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story