கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு .. கையும் களவுமாக சிக்கிய கௌரவ விரிவுரையாளர்

புதுக்கோட்டை அருகே, கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி வெளியான ஆடியோ விவகாரத்தில், கவுரவ விரிவுரையாளர் உட்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
x

புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு பிபிஏ படிக்கும் மாணவியிடம், அதே கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் என்பவர், செல்போனில் ஆபாசமாக பேசிய வெளியானது. அதனைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் கல்லூரிக்கு சென்று முத்துக்குமரனிடம் தகராறு செய்தனர். மேலும், இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம், பெற்றோர் புகார் அளித்தனர். இதன் உண்மை தன்மையை கண்டறிவது தொடர்பாக விசாரணை நடத்த, ஆறு பேர் கொண்ட குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்தது. அந்த விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமானதால், கவுரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த மற்றொரு கவுரவ விரிவுரையாளர் கலையரசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்