முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் புதுக்கோட்டை போலீசார் தீவிரம்

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 சோதனை சாவடிகள் அமைத்து, மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 30 இடங்களில் புதியதாக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் பெட்ரோல் மண்ணெண்ணெய் டீசல் உள்ளிட்ட பொருட்களோ, ஆயுதங்களோ உள்ளதா என்பதை சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோன்று மாவட்டத்திலிருந்து வெளியே செல்லும் வாகனங்களும் தணிக்கை செய்த பிறகே அனுப்பப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கடைவீதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்